Tuesday, 16 July 2013

உடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...?


உடைந்த இதயத்திற்கு ஒத்தடம் தருமா 'கேஷுவல் செக்ஸ்'...?

ஒரு உறவு முடிந்து.. அது முறிந்து.. மனசெல்லாம் சிதறி நிற்கும்போது பெரும் வெற்றிடம் ஏற்படும் .. மனதில். அதுபோன்ற சமயத்தில் கேஷுவல் செக்ஸ் ஆறுதல் தரும் என்கிறார்கள் நிபுணர்கள். 

உறவுகள் தொடர்கதை.. உணர்வுகள் சிறுகதை என்பார்கள். நீடித்து வருவது உறவு மட்டும்தான். உணர்வுகளுக்கு ஆயுள் குறைவு. ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிகரமான முடிவுகளால் உறவுகள் முறிந்து போய் விடுகிறது. 


இப்படிப்பட்ட நிலையில் மனம் அடையும் வேதனையும், வலியும் அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும்.

இப்படிப்பட்ட நேரத்தில் கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது நல்லதாம். ஆனால் இந்த கேஷுவல் செக்ஸில் ஈடுபடுவது என்பது மன நிலையைப் பொறுத்தது. 

கண்டிப்பாக ஈடுபட்டே ஆக வேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதும் நிபுணர்களின் கருத்தாகும். மனதில் ஏற்பட்ட காயத்தை சரி செய்ய செக்ஸில் ஈடுபடுவது நல்ல மருந்து சாப்பிடுவது போல என்பது இந்த நிபுணர்கள் தரும் விளக்கமாகும். 

மிகவும் சாதாரண முறையில், ஹாயாக செக்ஸில் ஈடுபடலாமாம். அதேசமயம், அதை உணர்ச்சிகரமாகவோ அல்லது மிகவும் சீரியஸானதாகவோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். இந்த செக்ஸானது நடந்த கசப்பான முறிவை சற்றே மறந்து மனசு லேசாகவும், ரிலாக்ஸ் ஆகவும் உதவுகிறதாம். 

இந்த உடனடி செக்ஸானது அடுத்து நாம் செய்ய வேண்டியது குறித்து நிதானமான முறையில் சிந்திக்கவும் உதவுகிறதாம். 

சிலருக்கு உணர்வுகளை மறப்பதும், துண்டிப்பதும் மிகப் பெரிய கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த கேஷுவல் செக்ஸால் கூட நிவாரணம் தர முடியாதநிலை ஏற்படலாம் என்றும் நிபுணர்கள் சொல்கிறார்கள். 

அதேசமயம், செக்ஸில் ஈடுபட்டால் ரிலாக்ஸ் கிடைக்கும் என்று உணரும் பட்சத்தில்தான் அதற்குப் போக வேண்டுமாம். இல்லாவிட்டால் அதனால் வேறு ஏதாவது டென்ஷன் வந்து சேர வாய்ப்புண்டாம்.

Saturday, 13 July 2013

ஓட்ஸ் சூப்

காலை உணவு என்பது மிகவும் இன்றிமையாதது. அதிலும் அந்த காலை உணவானது மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தால், அந்நாள் முழுவதும் உடல் நன்கு சுறுசுறுப்போடும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும். அந்த வகையில் மிகவும் ஆரோக்கியமானது தான் ஓட்ஸ் சூப். 

இந்த சூப் பேச்சுலர்கள் எளிதில் செய்து சாப்பிடக்கூடியதாக இருக்கும். மேலும் இதனை செய்வதும் மிகவும் எளிமையானது. 


அதுமட்டுமல்லாமல், இந்த சூப் சாப்பிட்டால், உடல் எடையால் அவஸ்தைப்படுபவர்களின் உடல் பருமானது குறையும். சரி, இப்போது அந்த ஓட்ஸ் சூப்பை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்: 


ஓட்ஸ் - 1 கப் 
வெங்காயம் - 1/2 (பொடியாக நறுக்கியது) 
பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது) 
பூண்டு - 1 பல் (தட்டியது) 
மிளகு தூள் - 1 சிட்டிகை
 பால் - 1 கப் தண்ணீர் - 1 கப் 
எண்ணெய் - 2 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து, நன்கு வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

 பின்பு ஓட்ஸ் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, ஓட்ஸ் மென்மையாகும் வரை வேக வைக்க வேண்டும். 

ஓட்ஸானது மென்மையானதும், அதில் பால் மற்றும் மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதித்ததும், தீயை குறைவில் வைத்து, மீண்டும் 3 நிமிடம் கிளறி விட்டு வேக வைத்து, இறக்க வேண்டும். 


இப்போது ஆரோக்கியமான ஓட்ஸ் சூப் ரெடி!!! 

மசித்த உருளைக்கிழங்கு மசாலா

உருளைக்கிழங்கு பிரியர்களுக்கு மதிய வேளையில் எளிதில் செய்து சாப்பிடக்கூடிய வகையில் ஒரு சூப்பரான ரெசிபியைக் கொடுத்துள்ளோம். 


இந்த ரெசிபியை பேச்சுலர்கள் கூட ட்ரை செய்யலாம். ஏனெனில் அந்த அளவில் இதனை செய்து முறை மிகவும் எளிதாக இருக்கும். 



அப்படி எளிதாக செய்யக்கூடிய ரெசிபி என்னவென்று கேட்கிறீர்களா? அது தான் மசித்த உருளைக்கிழங்கு மசாலா. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! 



தேவையான பொருட்கள்: 



உருளைக்கிழங்கு - 2-3 (வேக வைத்து,

 தோலுரித்து, மசித்தது) 
வெண்ணெய் - 1 டீஸ்பூன் 
வெங்காயம் - 1 (நறுக்கியது) 
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன் 
கடுகு - 1/2 டீஸ்பூன் 
சீரகம் - 1/2 டீஸ்பூன் 
கறிவேப்பிலை - சிறிது 
பச்சை மிளகாய் - 1 (நறுக்கியது) 
ஆலிவ் ஆயில் - 1 டேபிள் ஸ்பூன்
 உப்பு - தேவையான அளவு 


செய்முறை: 



முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்ணெய் சேர்த்து உருக வைக்க வேண்டும். 



பின் கடுகு, சீரகம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னியமாக வதக்க வேண்டும். 



பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்கினால், சூப்பரான உருளைக்கிழங்கு மசாலா ரெடி!!!

கறிவேப்பிலை இட்லி பொடி

பொதுவாக காலை வேளையில் அவசர அவசரமாக தோசை, இட்லி செய்துவிடுவோம். ஆனால் அதற்கு சட்னி, சாம்பார் என எது செய்வதென்று பலர் தினமும் யோசனையில் மூழ்குவார்கள். 


அத்தகயைவர்களுக்காக எளிமையான ஒரு ரெசிபியைக் கீழே கொடுத்துள்ளோம். அது வேறொன்றும் இல்லை, இட்லி பொடி தான், இட்லிப் பொடியில் பல உள்ளன. 



இப்போது அதில் கறிவேப்பிலை இட்லி பொடியை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதனைப் பார்ப்போமா!!! 



தேவையான பொருட்கள்: 



கறிவேப்பிலை - 1 கப் 

உளுத்தம் பருப்பு - 1/2 கப் 
கடலை பருப்பு - 1/4 கப் 
வர மிளகாய் - 7
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
 எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


 செய்முறை: 



முதலில ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கறிவேப்பிலையைப் போட்டு, 2-3 நிமிடம் மொறுமொறுவென வறுத்து, ஒரு தட்டில் எடுத்து வைத்து, குளிர வைக்க வேண்டும். 



பின் அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் ஆகியவற்றைப் போட்டு, தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வறுத்தப் பின் அதில் பெருங்காயத் தூள் சேர்த்து கலந்து, நன்கு குளிர வைக்கவும். 



அனைத்துப் பொருட்களும் நன்கு குளிர்ந்ததும், மிக்ஸியில் முதலில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரளவு அரைத்து, பின் அதில் வறுத்து வைத்துள்ள பருப்புக்கள் மற்றும் உப்பு சேர்த்து பொடி செய்து கொண்டால், சுவையான கறிவேப்பிலை இட்லி பொடி ரெடி!!! இதனை இட்லி, தோசை மற்றும் சாதத்தில் சேர்த்தும் சாப்பிடலாம்.

பேச்சுலர் முட்டை ரெசிபி

தற்போது வேலைக்காக வெளியூர்களில் தங்கி வேலைப் பார்ப்போரின் எண்ணிக்கை அதிகம். அதிலும் ஆண்கள் தான் ஏராளம். எனவே அத்தகையவர்கள் விடுதிகளில் உணவுகள் சரியில்லை என்பதற்காக, நண்பர்களுடன் சேர்ந்து வீடு எடுத்து தங்கி, தாமே சமைத்து சாப்பிடலாம் என்று முயற்சிப்பார்கள். அத்தகயை பேச்சுலர்களுக்கு ஒரு எளிமையான முட்டை ரெசிபியை கீழே கொடுத்துள்ளோம். 


அதைப் படித்து முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுக்கு சொல்லுங்கள். மேலும் இந்த முட்டை ரெசிபியை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக கூட சாப்பிடலாம். சரி, அந்த பேச்சுலர் முட்டை ரெசிபியைப் பார்ப்போமா!!! 

தேவையான பொருட்கள்: 


முட்டை - 5-6 (வேக வைத்தது) 
வெங்காயம் - 3 (பொடியாக நறுக்கியது) 
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன் 
புளி சாறு - 2 டீஸ்பூன் 
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
 எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் 
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

செய்முறை:

 முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

பின்னர் அதில் புளிச்சாறு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, 5-7 நிமிடம் வதக்கி விட வேண்டும். 


கலவையானது ஒரு பதத்திற்கு வந்ததும், அதனை இறக்கி, முட்டையை இரண்டாக வெட்டி வாணலியில் வைத்து, முட்டையின் மேல் அந்த கலவை நன்றாகப் படும்படி பிரட்டி, அதன் மேல் கொத்தமல்லியைத் தூவி பரிமாறினால், சூப்பரான பேச்சுலர் முட்டை ரெசிபி ரெடி!!!