காந்தகார், ஜூலை 4-
ஆப்கானிஸ்தானில் ஹெல்மன்ட் மாகாணத்தில் திருமண
கொண்டாட்டத்தில் குண்டு வெடித்தது. இதில் 7 முதல் 12 வயதுடைய 4 பெண்
குழந்தைகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருமணத்தில்
கலந்து கொள்ள வந்த குழந்தைகள், இன்று காலை அருகில் உள்ள ஆற்றில் தண்ணீர்
எடுக்க சென்றனர். அப்போது பாதையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்தது.
திருமணத்திற்கு வந்திருந்த அரசு அதிகாரிகளை தாக்கும் திட்டத்தில் தலிபான்கள் இந்த வெடிகுண்டுகளை மண்ணில் புதைத்து
வைத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த
ஆறுமாதத்தில் இது போன்ற தாக்குதல்களில் இறந்த பொது மக்களின் எண்ணிக்கை,
முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது 24 சதவீதம் அதிகரித்துள்ளது என்று
ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது.
No comments:
Post a Comment