ஜோர்டான் தலைநகர் அம்மானில் ஆசிய குத்துக்கண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியாவின் இளம் வீரர் ஷிவ தாபா, 56 கிலோ எடைப்பிரிவினருக்கான போட்டியில் தங்கம் வென்றார்.
இன்று நடைபெற்ற இறுதிச் சுற்றில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஷிவ தாபா (வயது 19), ஜோர்டானின் நட்சத்திர வீரர் ஒபாடா அல்காபேயை வீழ்த்தி இந்தியாவுக்கு முதல் தங்கத்தை பெற்றுக்கொடுத்தார்.
மேலும் மிக இளம் வயதில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர் என்ற பெருமையையும் ஷிவ தாபா பெற்றுள்ளார். மற்ற இறுதிச் சுற்று போட்டிகளில் தேவேந்திர சிங் (49 கிலோ), மன்தீப் சிங் (69 கிலோ) ஆகியோர் போராடித் தோல்வியடைந்ததால் வெள்ளிப் பதக்கங்கள் வென்றனர்.
மனோஜ் குமார் (64 கிலோ) ஏற்கனவே வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார். இதன் மூலம் ஒரு தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ளது.

No comments:
Post a Comment